அகத்தியர் வரலாறு:(Agathiyar History In Tamil)


                   அகத்தியர் என்ற பெயர் அவர் அகத்தின் செயலறிந்து கூறியதால் வழங்கலாயிற்று.

                    பரம சிவன் பார்வதியை மணந்த போது முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் கோடானகோடி மானிடரும் திருக்கல்யாணம் காட்சிகள் காண இமயம் சேர்ந்தனர். அந்நிலையில் பாரத்தால் தென்ங்கொடி உயர்ந்து வடகொடி தாலும் அபாயம் ஏற்பட்டது.

                   அப்போது அகத்தியரிடம் நீ இந்த வேளை தென்திசை சென்று தங்கி இரு. பூமி சமநிலை காணப்படும் என்றார் சிவபெருமான். நீ இருக்கும் இடத்திலேயே இணைக்கின்ற போது வந்து காட்சி தருவேன் என்று சிவபெருமான் வாக்களித்தார்.

                   அகத்தியர் மனமகிழ்வோடு தென்திசை பயணமானார். பூமி சமநிலை அடைந்தது கையிலையில் சிவபெருமானின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. சிவனுக்கு பூஜை செய்தும் பொதிகை மலையில் தவமியற்றி வந்த போது சதுரகிரியில் வசித்த சுத்தரானந்ர் தவ முனிவர்கள் பற்றிக் கேள்விப்பட்டார் அவர்களைக் காணச் சென்றார் சுந்தரானந்தர் யூகிமுனி கொங்கணர் ஆகியோர் அகத்தியரை வரவேற்று வணங்கினர்.

                   அவர்களுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டைச் செய்து வழிபடும்போது அகத்தியருக்கு சிவபெருமானின் திருமணக் காட்சியை காண ஆர்வம் ஏற்பட்டது. சிவபெருமானின் திருமணக் காட்சியை காட்டுமாறு வேண்டினார் சிவபெருமான் அவ்வண்ணமே பார்வதி தேவி  இருவருமே காட்சியளித்தனர்.

                    ஒருநாள் சுந்தரானந்தர் அகத்தியரிடம் அவர் பூசித்த லிங்கத்தை தாமே பூசிக்க விரும்பி கேட்கவும் அகத்தியரும் லிங்கத்தை அவருக்குத் தந்தார். Linga சொரூபமாகிய சிவபெருமானின் வடிவங்கள் பற்றியும் ஐந்து தொழில்களைக் பற்றி விவரித்தார்

திருமூலர் வரலாறு:Tirumoolar History in Tamil